கமால் குணரட்ன கைது செய்யப்படுவாரா?

299 0

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் எழுதிய “நந்திகடலுக்கான பாதை” என்ற புத்தகத்தின் அடிப்படையாக வைத்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் எழுதிய அந்த புத்தகத்தின் ஊடாக பல இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி அவரை கைது செய்யவுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நந்திக்கடலுக்கான பாதை என்ற புத்தகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.

அந்தப் புத்தகத்தின் ஊடாக இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மங்கள குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு பதில் வழங்க முடியாமல் தவித்ததாகவும் மங்கள ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.

கமால் குணரட்ன இராணுவத்தினரை நேரடியாக காட்டிக் கொடுத்துள்ளார் என மங்கள பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.