கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு(காணொளி)

275 0

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவில் 18ஆவது நாளாக தொடரும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி  திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 18ஆவது நாளாளகவும் தொடர்கின்றது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் இராணுவத்தினர் மக்களின் சொந்த நிலங்களில் நிலைகொண்டுள்ள நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தீர்வுகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் வருகைதந்து மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கவனயிர்ப்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை மக்களிடம் ஒப்படைக்க இந்த நல்லாட்சி என்று கூறப்படும் அரசாங்கம் முன்வரவேண்டுமெனவும், தங்களை போன்று இளைஞர்கள் அனைவரும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.