நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைவர்களும் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.இரண்டு பிரதான கட்சிகளின் ஆட்சியாளர்களை மாற்றாது இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார பிரச்சினை காரணமாக மக்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

