மக்களவை தேர்தலில் மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்: ஜி.கே.வாசன் கருத்து

150 0

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்தில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல், திமுக அரசு அரசியல் லாப நஷ்டக் கணக்கு பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல.

நீட் விவகாரத்தில் மக்களிடம் திமுகவினர் தவறான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, தற்போது நீட் தேர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது அரசியல் நாடகமாகும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு விஷயங்களில் தேக்க நிலை நீடிக்கிறது. மக்கள் இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 6 மாதங்களில் தேர்தல் வரப் போகிறது. மாநில அரசின் மீதான எதிர்மறையான வாக்குகள் இன்னும் அதிகரிக்கப் போகின்றன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்து ஏமாந்ததைப் போல, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஏமாற மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.