பொருளாதார செழிப்பை ஏற்படுத்திச் செல்லும் இலங்கைக்குள் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம் என்று உலகின் அனைத்து முலீட்டாளர்களிடமும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹொங்கொங்கில் இடம்பெறுகின்ற இலங்கை முதலீட்டு மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்திய அமைச்சர் இதனைக் கூறியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை காணப்பட்ட பாரம்பரிய விவசாய முறையை வர்த்தக விவசாய முறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதன் ஊடாக முதலீட்டாளர்களுக்கு பல முதலீட்டு சந்தர்ப்பங்கள் உருவாகியிருப்பதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன் கொழும்பு சர்வதேச நிதி நகரத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நாட்டின் பூகோள அமைப்பை பயன்படுத்தி வியாபாரங்களை ஆரம்பித்து சார்க் வலயத்தில் வாழுகின்ற பாரியளவான மக்கள் நன்மை பெற்றுக் கொள்ளும் விதமான முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உருவாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்

