ஜேர்மனியில் விரைவில் சட்டமாகும் குடியுரிமை மசோதா

143 0

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜேர்மன் குடியுரிமை மசோதா மீது இந்த மாதமே வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின் பணிக்குத் திரும்பியுள்ள ஜேர்மன் கேபினட் அமைச்சர்கள், ஜேர்மனியின் குடியுரிமைச் சட்டங்களை விரைவாக புதுப்பிக்கும் முயற்சிகளை துவக்கியுள்ளார்கள்.

அது குறித்து பேசிய FDP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Stephan Thomae, குடியுரிமை மசோதா மீது, அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இன்னும் தெளிவாகக் கூறினால், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 23ஆம் திகதி அல்லது 30 ஆம் திகதி குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படலாம் என அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.