வெள்ளவத்தையில் திடீர் மின் விநியோகத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை விளக்கம்!

210 0

கொழும்பின் வெள்ளவத்தை பிரதேசத்தில் இன்று திடீரென மின்தடை ஏற்பட்டிருந்தது.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெவ்லொக்- வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 துணை மின் நிலையங்கள் மின்விநியோகக் கட்டமைப்பிலிருந்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பழுதுபார்க்கும் பணிகள்   நடைபெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு மின்சார  விநியோகத்தை மீள வழங்குவதற்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.