மட்டக்களப்பில் தங்கச் சங்கிலி திருடிய 4 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

171 0

மட்டக்களப்பில் ஆலய மற்றும் தேவாலய திருவிழாக்களில்  தங்கச்  சங்கிலிகளைத் திருடிய  4 பெண்கள்  உட்பட 9 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் தேவாலயத்தில் திருவிழாக்கள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம்  குறித்த திருவிழாக்களுக்கு வருகை தந்தவர்களது  தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுமார் 22  பவுண்  பெறுமதியான தங்க ஆபரணங்கள்  காணாமற் போயுள்ளதாக மட்டு தமையைக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையகப்  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.