நரேந்திரமோடி கச்சதீவுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்

150 0

இந்திய பிரதமர் நரேந்திரமோடி கச்சதீவுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் என பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில்  தென்னிந்திய ஆதரவை பெறுவதற்காகவே மோடி இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு ஆலயவிழாவில் விசா இன்றி இந்தியர்கள் கலந்துகொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கையை இலங்கையில் தமிழர்கள் எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.