‘எதிர்ப்பு வாரம்’ : கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது

233 0

நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது.

நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது.

இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவினர் இந்த ஆர்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். அந்தவகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ளவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

‘இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.எதிர்வரும் நாட்களின் ஊடகவியலாளர்கள், களைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.