அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடத்துவதற்கு கால அட்டவணை – ஜனாதிபதி

199 0
அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த வருடத்தில் கால அட்டவணை ஒன்றை தயார் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செயல்பாடுகள் காலதாமதமடைதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை துரிதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளர்.
இலங்கை நிர்வாக சேவையின் 34ஆம் வருடாந்தர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது, அரசியல்வாதிகளுக்கும் அரச பணியாளர்களுக்கும் இடையிலான தொடர்பு சிறந்த முறையில் பேணப்படாத பட்சத்தில், அந்த முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும்.
சில பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி, மீண்டும் மத்திய திறைசேரிக்கு வந்தடைகின்றது.
சில பிரதேசங்களில் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் இடம்பெறுவதில்லை.
இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்ற போது, அமைச்சர்கள் உரிய நேரத்தினை வழங்குவதில்லை என அரச அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய செயற்பாடுகளால் மக்களுக்கான சேவைகளில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
எனவே, அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்துவதற்கான கால அட்டவணை ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.