இலங்கைக்கு மேலும் 2 வருடகால அவகாசம் – அமெரிக்கா ஆதரவு

251 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கும் யோசனைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை பலப்படுத்தும் யோசனைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரித்தானியா, மொன்டிநீக்ரோ, மெசிடோனியா மற்றும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கையுடன் நெருங்கி செயற்படுவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.