தமிழக கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை சுஷ்மா சந்திக்கவுள்ளார்

211 0
தமிழக கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைக் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை எதிர்வரும் 21 ஆம் திகதி சந்திக்க உள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். எமரிட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்துள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் 138 படகுகளையும் விடுவிக்க வெளிவிவகார அமைச்சரிடம் இதன்போது கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். எமரிட் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தமிழக கடற்றொழிலாளரான பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஏற்பட்டுள்ள சுமூகமற்ற நிலைமையை அடுத்தே இந்தசந் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.