30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

228 0

கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கங்களை விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு கூறியுள்ளது.

அந்தப் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைக்கு உட்படித்தியிருந்தனர்.

இதன்போது, சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வாகன உதிரிப்பாகங்கங்கள், ஜப்பான் மற்றும் ஜேர்மன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுதல், விலை குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்படுதல் போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சில பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், வர்த்தகர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.