தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை

240 0

இடத்திற்கு இடம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது போன்று மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

உரிய முறையில் கல்வித் தகைமையை பெற்றவர்களையே தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உள்வாங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையினுள் எந்தவொரு தருணத்திலும் இலவச கல்வியை விட்டுத் தர இடமளிக்கப் போவதில்லை என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தனியார் கல்விக்கு உள்ள உரிமைக்கு இடையூறு விளைவிக்காத நிலையில் தனியார் பல்கலைக்கழகத்தை தோற்றுவிப்பதற்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் உரிய தரமற்ற பல்கலைக்கழகத்தை தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்க போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.