தாஜூடீன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்! மைத்திரி

93 0

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாஜூடினின் வாகனத்திலேயே எரியூட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவரின் காதலியை பின்தொடர்ந்தார் என்ற காரணத்தினால் தாஜூடீன் கொல்லப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டில் அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இந்த வழக்கிற்கு என்ன நேர்ந்தது என்பதே தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றில் பாதுகாப்பாக காணப்பட்ட தாஜூடீனின் உடல் பாகங்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.