கொழும்பில் வீதி விபத்து: இளம் யுவதி பலி

97 0

கொழும்பில் இடம்பெற்ற விபத்தொன்றில் திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கொழும்பு – இரத்மலானை பகுதியில் இன்று (07.08.2023) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதி, திருகோணமலையைச் சேர்ந்தவரும் தெஹிவளையில் வசிப்பவருமான 24 வயதுடைய சிவலிங்கம் சிவப்பிரியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி வேலைத்தளத்துக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதி, வீதிக் கடவை இல்லாத பகுதியால் வீதியைக் கடக்க முயன்றுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.