இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது..

245 0

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று பலாங்கொடை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரி திணைக்களத்தின் பலாங்கொடை காரியாலயத்தில் சேவையாற்றும் இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கஞ்சா போதைப் பொருளை மாத்திரம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக வழக்கு தொடர்வதாகவும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தமைக்காக வழக்கு தொடராதிருப்பதற்காக ஒரு லட்சம் ரூபா இலஞ்சமாக கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.