ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் – 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

258 0

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் உட்பட 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.