வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க முடியாது – மங்கள சமரவீர

314 0

வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்கவேண்டுமாயின் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது.

இதன்போது, தமது பரிந்துரைகளையும் அதில் உள்ளடக்குமாறு சர்வதேச தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அது நியாயமானது.

வடக்கில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள் மற்றும் துன்பம் அனுபவித்தவர்கள் பலர் இருக்கின்றனர்.

இந்த நிலையில், வெளிநாட்டவர்களின் நம்பிக்கை இல்லாமல் போனால் பரவாயில்லை.

எமது நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் செயற்பாட்டை நாம் முன்னெடுக்கின்றோம்.

இந்த நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் பங்கேற்க வேண்டும் என்றில்லை.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க முடியாது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.