பல்வேறு விபத்துக்களில் 5 பேர் பலி!

156 0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரை, திக்வெல்ல மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எம்பிலிபிட்டிய மித்தெனிய வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பெண் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், கலகெதர கந்தகும்புர பிரதேசத்தில் கெப் ரக வாகனத்தின் பின்புறத்தில் நாற்காலியில் அமர்ந்து பயணித்த ஒருவர் வண்டியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகரை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அக்கராயமன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கெப் ரக வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, திக்வெல்ல நகருக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 84 வயதுடைய பெண் ஒருவர் காரில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.