ராஜபக்சவினரின் கோட்டையில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கிய மைத்திரி!

236 0

நாட்டில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத சகல காணிகளிலும் மீண்டும் பயிர் செய்கை உற்பத்திகளுக்காக பயன்படுத்த உரிய வினைத் திறனான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விவசாய நாடு என்ற வகையில் நாட்டில் உள்ள காணிகளை உணவு பயிர்களை பயிரிட சரியான முறையில் பயன்படுத்த வேண்டியவது அவசியம்.நாட்டில் வறுமையை ஒழிக்க இது மிகவும் முக்கியமான காரணி எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாதோட்டை மாவட்ட மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் “பொன் பூமிக்கான உரிமை“ காணி உறுதிகள் மற்றும் கொடுப்பனவு பத்திரங்களை வழங்குவதற்காக அம்பாந்தோட்டை புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மனிதாபிமான உரிமையான காணி உரிமைகளை வழங்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பக்கச்சார்பாக நடந்து கொள்ள வேண்டாம் என சகல அரசியல்வாதிகளிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளார்.