கிழக்கை உலுக்கும் டெங்கு – 3 ஆயிரத்து 605 பேர் பாதிப்பு

255 0
கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதிக்குள் 3 ஆயிரத்து 605 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகானந்தம் இதனை தெரிவித்துள்ளார்.
இவற்றுள் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குற்பட்ட பிரிவில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும்.
குறிஞ்சாக்கேணியில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூதூரில் 418 பேரும், திருகோணமலையில் 379 பேரும், உப்புவெளியில் 266 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டொங்கு நோயினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.