பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விமான நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரபுக்களுக்கான பகுதியில் இந்த பிறந்த நாள் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
நாட்டின் பிரதான அரச உத்தியோகத்தர்களில் ஒருவரான பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று தனது 57ம் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பொலிஸ் மா அதிபருக்கு ஆச்சரியத்தை ஊட்டும் வகையில் இந்த பிறந்த நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 11ம் திகதி பங்களாதேஸின் டாக்கா நகரிற்கு மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக விஜயம் செய்திருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று நாடு திரும்பியிருந்தார்.
பொலிஸ் மா அதிபர் நாடு திரும்பிய போது அவரை வரவேற்பதற்கு சென்றிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நந்தன முனசிங்க கபில ஜயசேகர மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடயைமாற்றி வரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியலால் தசாநயாக்க ஆகியோர் இந்த பிறந்த நாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.