களுத்துறை தாக்குதல்: இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை

343 0

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 27ம் திகதி கடுவளை நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பஸ் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சமயங் எனப்படும் அருண உதயசங்க என்ற முக்கிய குற்றவாளி உட்பட ஏழ்வர் உயிரிழந்தனர். அத்துடன் இந்த சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.