பெண்ணுக்கு உதவிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

143 0

போலியான கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தொழில் பெற்றுச் செல்ல   உதவிய குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு  இந்திய வீசா மற்றும் விமான டிக்கெற்றைக் காட்டி ஏமாற்றி, சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்குச் செல்ல முயன்ற பெண் ஒருவரையே அந்த அதிகாரி அழைத்துச் சென்றதாக  தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல விமானங்கள் புறப்படும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த அதிகாரி குறித்த  பெண்ணை தனது உறவினர் என அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரது இந்தியாவுக்கான பயண ஆவணங்களை விரைவில் அங்கீகரிக்குமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது.

குறித்த பெண் இந்தியாவுக்கு செல்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், ஓமானுக்கான சுற்றுலா  விசா மற்றும் பயணச்சீட்டு வைத்திருந்ததையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.