யாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்

158 0

யாழ்ப்பாணம் – கந்தர்மடத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டுத் தளபாடங்களை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கந்தர்மடம் – பழம் வீதியில் இன்று (29.07.2023) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடம் – பழம் வீதியிலுள்ள மருத்துவ தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்றே குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த வீட்டில் இவ்வாறு தாக்குதல் இடம்பெறுவது இரண்டாவது முறை எனவும், கடந்த சில வாரங்களிற்கு முன்னரும் வீட்டிற்குள் இவ்வாறு கும்பல் ஒன்று நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணி உரிமை தொடர்பான தகராறினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.