ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை

151 0

பொரளை ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று (29) புதுக்கடை நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர  வெள்ளிக்கிழமை (28) தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவேளை பொரளையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் தரிந்து முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர் நீதிமன்ற உத்தரவுக்கமைய  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.