மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி சயிடம் நிறுவனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள், உயர் கல்வி அமைச்சர், வைத்திய சபை அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சயிடம் நிறுவனத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் சயிடம் நிறுவனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

