வடக்கில் மேலும் 600 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

199 0
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு மேலும் 631 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வட மாகண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு மேலும் 631 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அவ்வாறு 631 ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளோர் கணிதம் , விஞ்ஞானம் மற்றும் உயர்தர மாணவர்களிற்கான தொழில்நுட்ப பாடங்களிற்குரிய ஆசிரியர்களிற்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.
இவ்வாறு கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களிற்கான முடிவுத்திகதி ஏப்பிரல் மாதம் 9ம் திகதியாகும் எனவே அதுவரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் அவ்வாறு கிடைக்கும் விண்ணப்பங்களும் உரிய முறைப்படி பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களிற்கு நியமனம் வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படவுள்ள  மொத்தமான 631 நியமனங்களிலும் 111 பட்டதாரிகள் சிங்கள மொழிமூலப் பட்டதாரிகளிற்கும் 520 தமிழ் மொழிப் பட்டதாரிகளிற்கும் குறித்த நியமனங்கள் வழகப்படவுள்ளன.
இதேவேளை வடக்கு மாகாண கல்வி அமைச்சினைப் பொறுத்த மட்டில் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதிகளில் 3 கட்டங்களாக இதுவரை பட்டதாரிகளில் மட்டும் 1500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றார்.