அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

277 0

சட்டத்தின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முகாமைத்துவத்தை விடவும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு, பானங்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான ஏனைய நுகர்வுப் பண்டங்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

உணவு பானங்கள் உள்ளிட்ட ஏனைய நுகர்வு பண்டங்களின் தரம் நாட்டு அபிவிருத்தியின் முக்கிய அளவுகோலாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கொழும்பு தொடக்கம் நாடு முழுவதுமுள்ள உணவக சமையலறைகளில் அந்த தரம் மற்றும் தூய்மையை காண முடியாதெனவும் தெரிவித்தார்.

நேற்று கொண்டாடப்படும் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

‘டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமைகள்’ எனும் தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக நுகர்வோர் பெறும் பல்வேறு சேவைகளை மேலும் நம்பிக்கைமிக்கரூபவ் பாதுகாப்பானதாக மாற்றுவது இலக்காகும்.

இலங்கையில் டிஜிட்டல் நுகர்வோர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய கொள்கைகளை தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்குவதும் இந்த மாநாட்டின் பின்னர் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;
நவீன தொழில்நுட்பத்துக்கு உட்பட்டதுடன் அந்த அபிவிருத்தி எமக்கு எளிதாக இருந்தபோதிலும், அது பெரும்பாலம் ஒட்டுமொத்த சமூகத்தின் அழிவிற்கே பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை மானிட சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தவது அறிவுள்ள பிரஜைகளின் பொறுப்பாகும்.

நவீன தொழில்நுட்பம் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பிலும் எதிர்காலத்தில் மிகப் பரந்தளவில் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘டிஜிட்டல் யுகத்தில் பிராந்திய மற்றும் பூகோள நுகர்வோர் பிரச்சினைகள், நுகர்வோர் நெகிழ்வுத்தன்மை மற்றும் பரம்பல்’ எனும் தலைப்பிலான பிரதான விரிவுரையை ஆசிய பசுபிக் பிராந்திய சர்வதேச நுகவர்வோர் செயற்திட்ட அலுவலர் சத்யா ஷர்மா அவர்கள் ஆற்றினார்.

ஜனாதிபதியினால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக மங்கள விளக்கேற்றியதும் சிறப்பம்சமாகும்.

சமூக ஊடகங்கள் மூலம் நுகர்வோர் அதிகார சபையுடன், நுகர்வோரை நெருங்கச் செய்யும் செயற்திட்டமும் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டது.

கைத்தொழில், வர்த்தக விவகார அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹரீன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாஸ, கைத்தொழில், வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ். முத்துஹெட்டி, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்