சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த எட்டு மாலுமிகளுடன் குறித்த கப்பல் கடந்த தினம் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட தற்போது அலூலா நகரின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், அதன் மாலுமிகள் தனி அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கப்பலை கண்டுபிடித்து மீட்பதற்கான தாக்குதல்கள் நடைபெறாதிருக்கும் பொருட்டு, கப்பலின் தொடர்புசாதனங்கள் அனைத்தும் கடற்கொள்ளையர்களால் முடக்கப்பட்டுள்ளது.
கப்பலையும், மாலுமிகளையும் விடுவிப்பதற்கு கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ள போதும், எந்த அளவு தொகையை கோரியுள்ளனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கப்பல் குறித்து உரிய தரப்பினருடன் தொடர்பில் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

