இங்கிரிய – ஹந்தப்பான்கொடையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் ஹந்தப்பான்கொடை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஒருவர் தப்பி சென்றுள்ளார்.
இதன்போது காயமடைந்தவர் ஹொரணை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் வழக்கு ஒன்றிற்காக ஹொரணை நீதிமன்றிற்கு சென்று வீடு திரும்பும் வழியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

