கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது – அஜித் பீ பெரேரா

235 0

இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் உறுதிபட அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் எதிர்வரும் 22ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க்குற்றவிசாரணை விடயத்தில் அரசாங்கம் பிழையான முறையில் தாமதம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

எனினும் இலங்கையின் உள்விவகாரங்களைக் கையாளக்கூடிய இயலுமை அரசாங்கத்துக்கு இருப்பதாக பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா கூறியுள்ளார்.