வடமாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயங்க வேண்டியுள்ளது – மாவை எம் பி

242 0
வட மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயக்கபடவேண்டியுள்ளது. அதேபோன்று புதிய முதலீடுகளும் மேற்கொண்டு எமது இளைஞர் , யுவதிகளிற்கு வேலை வாய்ப்பையும் வழங்கவேண்டிய தேவையுள்ளது.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மாவை.சோ.சேனாதிராஜா கனேடிய நாடாளுமன்ற மற்றும் முதலீட்டுக் குழுவினருக்கு எடுத்துரைத்தார்.
கனடா நாட்டின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேலும் 24 முதலீட்டாளர்களும் உள்ளடங்கிய குழு நேற்றவய தினம் வடமாகாணத்திற்கு வருகை தந்து முதலீட்டு ஊக்குவிப்புத் தொடர்பில் பலவேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடுனர். இவ்வாறு வருகைதந்த குழுவினர் நேற்று மாலையில் தமிழ.த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் சந்தித்தனர். இதன்போதே மாவை சேனாதிராஜா மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில்ல,
வட மாகாணத்தில் முன்னர் இயங்கிய  பல தொழிற்சாலைகள் மீளவும்  இயக்கபடவேண்டிய தேவை உள்ளது. அதேபோன்று மேலும் பல  புதிய முதலீடுகளும் மேற்கொண்டு எமது மாகாணத்தில் உள்ள வேலையற்ற  இளைஞர் , யுவதிகளிற்கு வேலை வாய்ப்பையும் வழங்கவேண்டிய தேவையுள்ளது.்இதற்காக உங்களைப்போனலறவர்கள் முனவர வேண்டும்.
இந்த மாவட்டத்திலும்  ஓர் பகுஉதிநிலம் இன்றும் படையினர் வசம் உள்ளது அந்த நிலம் மிகவும் வளமான ஓர் பகுதியாகும் அந்த நிலத்தில் பல முதலீடுகள் மேற்கொள்ளக் கூடியதான நிலங்கள் உண்டு. இதேவேளை இந்த நாட்டில் தற்போது சில சிறு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் இன்னும் பல பாரிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவேண்டியுள்ளது. இதேநேரம் வடக்கின் தொழில் மையங்கள் தொடர்பில் பிரதமரிடத்திலும் எடுத்துக் கூறினோம் இருப்பினும் நிலமை அப்படியே உள்ளது.
இதேவேளை பொருளாதார மேம்பாடுகள் முதலீடுகள் அபிவிருத்திகளின் தேவையை பல விடயங்கள் கோரிநிற்கின்றன.்அதில் ஒன்றே எமது பகுதிகளில் மட்டும் 80 ஆயிரம் பெண் தலமைத்துவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரமும் பெரும் கேள்விக் குறியிலேயே உள்ளது.அதேபோன்று 12 ஆயிரம் மாற்று வலுவுள்ளோர் என போரின் கொடுமைகள் சுமந்த அவலங்களே அதிகமாக வாழ்கின்றனர். என்றார்