எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பீட மாணவர்களின் இயக்கம் இன்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்தது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

