யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் நிறை இரண்டுகிலோகிராம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


