டெங்கினால் 74 நாட்களில் 33 பேர் உயிரிழப்பு

292 0

இந்த வருடத்தின் முதல் 74 நாட்களில் டெங்கு தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதுபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு தொற்றினால் 21 ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை –கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கிண்ணியா கல்வி வலைய திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கிண்ணியா பகுதியில் கடந்த 3 வாரங்களில் 13 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தனர்.

மேலும் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த 66 பாடசாலைகளும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கிண்ணியா கல்வி வலைய திணைக்களம் அறிவித்துள்ளது.