இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
குறித்த உடன்படிக்கை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசுக்கும் மியன்மார் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட உள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

