தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது ஒன்று நேற்றைய தினம்வழங்கி வைக்கப்பட்டுள்ளது என த கொரியா ஹெரலட் என்ற ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
குறித்த இலங்கையர் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண்ணொருவரை காப்பாற்றியசம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 10ம் திகதி,தென் கொரியாவில் உள்ள வீடு ஒன்று தீ பற்றிக் கொண்டபோது அந்த வீட்டினுள் இருந்த வயோதிப பெண் ஒருவரை குறித்த இலங்கையர்காப்பாற்றியுள்ளார்.Katabilla Ketiyage-Dara Nimalsiri என்ற 39 வயதுடைய இலங்கையருக்கே இந்த விருதுவழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக தீ காயங்களுக்குள்ளாகியுள்ளான இலங்கையருக்கு நுரையீரல்பாதிப்படைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த இளைஞரின் இந்த மனிதாபிமான செயற்பாடு காரணமாக அவருக்கு 30மில்லியன் பணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு நபர் குறித்த இலங்கையரே என எல்ஜிபவுன்டேஷன் தெரிவித்துள்ளது.

