டெங்கு வைரஸில் தற்போது வேறுபாடுகள்

339 0

டெங்கு வைரஸில் தற்போது வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் பிரஷிலா சமரவீர இந்த சந்தேகத்தினை வெளியிட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் பரவும் டெங்கு நோய் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் 75 நாட்களுக்குள் டெங்கு நேயினால் 33 பேர் உயிரிழந்தனர்.மேலும் 21 ஆயிரத்து 541 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வைரசின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.கிண்ணியாவில் கடந்த 3 வாரங்களில் மாத்திரம் 12 பேர் டெங்கினால் உயிரிழந்தனர்.

இதனால் கிண்ணியா கல்வி வலையத்துக்கு உட்பட்ட 66 பாடசாலைகள் தற்காலகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.