தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நால்வர் கைது!

141 0
குடும்பத்  தகராறு  சம்பவம் ஒன்றை முன்னிறுத்தி,  ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம்  செய்து  நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை, தெபுவன பொலிஸார் தெரிவித்தனர்.

கொரியாவில் பணிபுரியும்  ஒருவர்,  தனது மனைவி மூலம் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம்  கொடுத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெபுவன, தொம்பதொட, யதவர பிரதேசங்களைச் சேர்ந்த 22, 25 மற்றும் 45 வயதுடையவர்களும், அயல் பிரதேசத்தில் வசிக்கும் கொரியாவிலிருந்து இந்தத் திட்டத்தைச் செயற்படுத்திய சந்தேக நபரின் மனைவியுமே இந்தச் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.