இலங்கையுடனான தென்கொரிய பொருளாதார ஒத்துழைப்பு அடுத்து மூன்று ஆண்டுகளில் விரிவடையும்

435 0

இலங்கையுடனான தென்கொரிய பொருளாதார ஒத்துழைப்பு அடுத்து மூன்று ஆண்டுகளில் விரிவடையும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங் சே இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய 300 மில்லியன் டொலர்களில் இருந்து 500 மில்லியன் டொலர்கள் வரை பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யுன் பியூங் சே நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை – தென்கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 40 ஆண்டுகால பூர்த்தியை முன்னிட்டே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 31 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.