கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த சகல நாடுகளும் கைகோர்க்கும் காலம் வந்துள்ளது – இலங்கை பிரதமர்

219 0

கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த சகல நாடுகளும் ஒன்றிணைந்து கைகோர்க்கும் காலம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதுடெல்கியில் இடம்பெற்ற ‘2017 பயங்கரவாத தடுப்பு மாநாட்டில்’ ஸ்கைப் தொடர்பாடல் மூலம் உரையாற்றியவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த ஒன்றரை தசாப்தமாக கடற்கொள்ளையர் மற்றும் தரையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகளும் தலைத்தூக்கியுள்ளன.

3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்து சமூத்திரத்தின் ஊடாகவே உலகின் முக்கிய வர்த்தக கப்பல்கள் பயணிக்கின்றன.

இது ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பெறும் பொருளாதார பலமாகும்.

எவ்வாறாயினும் கடற்கொள்ளையர்கள் இந்த பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.

அதுபோலவே இந்து சமூத்திரத்தில் தலைத்தூக்கியுள்ள நவீன தொழிநுட்ப முறையிலான பயங்கரவாதம் குறித்தும் நாம் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும்.

அனைத்து வகையான பயங்கரவாத நடடிக்கைகளையும் கட்டுப்படுத்த அனைத்து அரச தலைவர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏற்பட வேண்டும் என கோருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.