மேன்மையான வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்புக்கு 132 ஆவது இடம்

335 0

மேன்மையான வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு 132 ஆவது இடத்தில் உள்ளது.

மேர்ஸர் அமைப்பின் மேன்மையான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நகரங்களின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டைப் போலவே ஆஸ்திரிய தலைநகர் வியன்னா நகரம் முதல் இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூஸிலாந்தின் ஒக்லேண்ட், மற்றும் ஜேர்மனியின் மியுனிக் ஆகிய நகரங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.