அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக்காக ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் ஒரு மாதக் காலப்பகுதியில் விண்ணப்பித்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
2012-2013ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பிரவேசித்த அகதிகளிடம் ஒருமாதக் காலத்துக்குள் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
கடந்த பெப்ரவரி மாதம் அவுஸதிரேலிய குடிவரவுத்துறை அமைச்சினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த 30 நாட்கள் கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள், அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு, எவ்வித சலுகைகளும் இல்லாதவர்களாக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதேநேரம், இத்தனை வருடங்களாக அவர்களை விண்ணப்பிக்கச் செய்யாதிருந்தமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு தரப்பினரால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

