இராணுவத்தின் நலன் திட்டங்களை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

329 0

mythiri 554565645இராணுவத்தினர் தொடர்பான நலன் வேலைத்திட்டங்களை விஸ்த்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்துக்கான வீடமைப்பு வேலைத்திட்டங்களை மேலும் விஸ்த்தரிக்கமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.