இலங்கையின் போக்குவரத்துச் சேவை தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது – அமைச்சர் நிமல்

293 0

இலங்கையின் போக்குவரத்துச் சேவை தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

தொடரூந்து திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறையை அரசாங்கம் தனியார்மயப்படுத்த எதிர்பார்ப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் தமது ஒழுங்குப் பத்திரத்தை முன்னெடுத்து செல்வதற்காக இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளது.

தமது உரிமையை வென்றறெடுக்க வேண்டிய உரிமை தொழிற்சங்களுக்கு உள்ளது.

ஆனால், அது மக்களை ஏமாற்றும் வகையில் நியாயமற்ற காரணங்களாக அமையக் கூடாது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.