இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

249 0

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார். 

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கிடையிலான பரஸ்பர உறவின் 40 வருட பூர்த்தியை நினைவு கூறும் விதமாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும் இலங்கை வந்தடைந்த யுன் பியூங்-சே, இன்று இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மற்றும் பிரதமஉள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு தென்கொரிய வௌிவிவகார அமைச்சர் ஒருவர் கடைசியாக இலங்கை வந்திருந்தார். அதன் பிறகு 31 வருடங்கள் கடந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.