மஸ்கெலியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

139 0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த  தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில்  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 52 வயது உடைய   மூன்று குழந்தைகளின் தந்தையான வெளிக்கள உத்தியோகத்தர் செமுவேல் வின்சென்ட் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை அட்டன் நீதிமன்ற நீதிவான் வந்து பார்வையிட்ட பின்னர், கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.